பல லட்சம் பெறுமதியான வல்லப்பட்டையுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக டுபாய் நோக்கி கொண்டு செல்லப்படவிருந்த ஒரு தொகை வல்லப்பட்டையுடன் இரண்டு பேர் விமான நிலைய சுங்க பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த வல்லப்பட்டையை தமது பயண பைகளில் சூட்சுமமாக மறைத்து வைத்து கொண்டு செல்ல முற்பட்ட போது நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 107 கிலோ கிராம் வல்லப்பட்டை இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி 12 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மாத்தறை மற்றும் கேகாலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்