திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்ஸவம்..!

திருகோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்ஸவம் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை 05 மணிக்கு துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்ற கிரியைகள் ஆரம்பம் ஆகி காலை 8.00 மணிக்கு கொடியேற்றம் இடம் பெறும், அன்று அம்பாள் காராம்பசு வாகனத்தில் எமுந்தருள் வாள் அதனைத் தொடர்ந்து 21 ஆம் திகதி புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு மகர வாகனத்திலும், 3ம் நாள் வியாழக்கிழமை சர்ப வாகனத்திலும், 4ம் நாள் வெள்ளிக்கிழமை அன்னவாகனத்திலும், 5ம் நாள் சனிக்கிழமை மஞ்சதத்தில் பவனி வருவாள் அம்பாள்.
6ம் நாள் ஞாயிற்றுக்கிழமை கைலாச வாகனத்தில் எமுந்தருளி, 7ம் நாள் திங்கட்கிழமை சிம்மவாகனத்திலும், 8ம் நாள் செவ்வாய்க்கிழமை குதிரை வாகனத்திலும், 09 நாள் புதன்கிழமை சப்பறத்திலும் அம்பாள் பவனி வந்து அருள் புரிவாள்.
29-03-2018 ,10 நாள் வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு அம்பாள் தேரில் ஆரோகணித்து விநாயகரும், முருகனும், முன்னேவர அம்பாள்  இரதத்திற் பவனி வந்து அடியார்களுக்கு காட்சி கொடுத்தருளுவாள் அன்று மாலை 6.00 மணிக்கு ரிஷப  வாகனத் திருவிழா இடம் பெற்று,  30 -03-2018 வெள்ளிக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு மூலஸ்தானப் பூஜை, தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை இடம் பெற்று சரியாக 5.00 மணிக்கு அம்பாள் திருகோணமலை சமுத்திரக் கரைக்கு எமுந்தருளி சூரியோதயத்தில் தீர்த்தோற்ஸவம் நிகமும். என ஆலயத்தின் ஆதினகர்த்தா வேதாகமமாமணி பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திரக்குருக்கள் தெரிவித்தார்.
 ஆர்.சுபத்ரன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்