சேவ் சிரியா இயக்கம் எனும் பெயரில் மத வெறி பிரச்சாரங்களை தடை செய்ய கோரிக்கை

(SAVE SYRIA) சேவ் சிரியா இயக்கம் எனும் பெயரில் தமிழகத்தில் இசுலாமிய பயங்கர வாதச் சிந்தனையை பரப்பும் முயற்சி ISIS இயக்கத்திற்கு ஆள்சேர்க்கும் முயற்சியில் ஈடுபடும் இசுலாமிய அடிப்படைவாத அமைப்புக்கள், நாம் தமிழர் கட்சி மே 17 இயக்கம், நக்சல் குழுக்கள் மற்றும் திரவிடர் கழகங்கள் ஆகியவற்றை கண்கானித்து உரிய தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுதல்.

சிரியா நாட்டில் இசுலாமிய பயங்கரவாத குழுக்களுக்குள் நடக்கும் மோதலில் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். ஷியா பிரிவு முஸ்லீம்கள் மற்றும் சன்னி பிரிவு முஸ்லீம்கள் ஒருவருகொருவர் மோதிக்கொள்கின்றனர். இதில் ஆட்சியாளருக்கு ஆதரவாக சோவியத் இரஷ்ய படைகள் குண்டு மழை பொழிகின்றன. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆயுதங்கள் கொடுக்கின்றது. அன்றாடம் மக்கள் சாகின்றனர்.

இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள இசுலாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் நாம் தமிழர் கட்சி, மே 17 இயக்கம், நக்சல் குழுக்களுடன் இனைந்து திராவிடர் கழகங்களின் ஆதரவுடன் (SAVE SYRIA) சேவ் சிரியா இயக்கத்தை நடத்துகின்றனர். மசூதிகளிலும், மதரசாக்களிலும் அப்பாவி இசுலாமிய மக்களிடம் சிரியாவில் நடைபெறும் கொடுமைகள் குறித்து படங்களுடனும், கானொலி காட்சிகளுடனும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும் பிரச்சாரம் செய்கின்றனர். தாங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் அரங்க, பொதுக் கூட்டங்களுக்கும் ஆட்களை திரட்டுகின்றனர். ஏராளமான சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இசுலாமிய மத வெறி பேச்சுக்கள் பேசப்படுகின்றன.

நாம் தமிழர், மே 17, திராவிடர் கழகங்கள் நக்சல் குழுக்களும் இசுலாமிய இயக்கங்களுடன் இணைந்து போராட்டம் செய்கின்றனர். இதற்காக பெரும் பொருள் செலவிடப்பட்டு விளம்பரம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. நம் நாட்டு இசுலாமியர்கள் மத்தியில் அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற தன்மையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ISIS போன்ற பயங்கரவாத இயக்கங்களில் சேரும் எண்ணத்தையும் உருவாக்கி விடுகின்றனர். இது தமிழகத்தின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும்.

ஏற்கனவே தமிழகத்தில் சில இசுலாமிய இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு ISIS இயக்கத்தில் இணைந்துள்ளனர். ISIS இணையதளத்தை இயக்குவதே தமிழகத்தை சேர்ந்த இசுலாமிய இளைஞர் என தகவல் வந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் சேவ் சிரியா இயக்கத்திற்கு பணம் வந்த வழி, இதில் ஈடுபட்ட இயக்கங்களின் பிண்ணனி, வெளிநாடுகளுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பு, சர்வதேச இசுலாமிய இயக்கங்களுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பு ஆகியவை குறித்து காவல் துறை மூலம் விசாரணை செய்து தமிழகத்தில் இசுலாமிய ஜிகாத் பயங்கரவாதம் தாலிபான் மற்றும் ISIS இயக்க ஆதரவு பிரச்சாரங்கள் ஆகியவற்றை தடை செய்ய வேண்டுகிறோம். உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகத்தில் அமைதி நல்லிணக்கம் ஆகியவற்றை காத்திட வேண்டுகிறோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்