நாட்டில் மழை காலநிலை அதிகரிக்க கூடும்

நாட்டில் மழை காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா, சபரகமுவ மாகாணங்கள் ஊடாக அம்பாறை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 100 மில்லி மீட்டர் வரை கடும் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே காலி தொடக்கம் ஹம்பாந்தொடை மட்டக்களப்பு ஊடாக வாகரை வரையிலான கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 அல்லது 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்