வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடாவின் 23 வது வருடாந்தப் பொதுக்கூட்டம்

வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடாவின் 23 வது வருடாந்தப் பொதுக்கூட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது.

வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை 3600
முiபௌவழn சுனஇ ளுஉயசடிழசழரபா இல் அமைந்துள்ள Scarborough Village Recreation Centre மண்டபத்தில் திரு. சி. இளஞ்செழியன் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அதிக எண்ணிக்கையான அங்கத்தவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். முதலில் இறை வணக்கத்துடன்  ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் கடந்த 23 ஆண்டுகளாகச் சங்கம் கடந்து வந்த பாதை பற்றியும் தற்போது சங்கத்தினால் செயற்படுத்தப்படும் அர்த்தமுள்ள நீண்டகாலச் செயற்திட்டங்கள் பற்றியும் இதனால் தற்போது கல்லூரியும் மாணவர்களும் அடைந்துவரும் நன்மைகள் பற்றியும் குறிப்பாக உயர்தர விஞ்ஞானப் பிரிவின் பரீட்சைப் பெறுபேறுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும் விபரமாக எடுத்துரைத்தார். மேலும் சகோதர சங்கமான பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தின் விளையாட்டு மைதான அபிவிருத்திச் செயற்திட்டத்தின் நிறைவுப் பணியில் சைவங்கடைக் காணி வாங்கப்பட்ட விடயத்தையும் பாராட்டினார்.

 

பின்னர் பழைய மாணவரும் கல்லூரியின் முன்னாள் ஆசிரியருமான திரு கெங்காதரம்பிள்ளை தனபாலன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். அடுத்து நடைபெற்ற எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடலின்போது பழைய மாணவர்கள் சங்கத்தின் வளர்ச்சி பற்றியும் குறிப்பாகக் கடந்த ஏழு ஆண்டுகளாகச் சங்கம் ஆற்றி வரும் அளப்பரிய சீரிய பணிகள் பற்றியும் தங்கள் எண்ணக் கருத்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு தொடர்ந்தும் இப்பணிகள் வழமைபோல் தொடருவதற்கு செயற்திறனும் அர்ப்பணிப்பும் மிக்க தற்போதய நிர்வாகம் தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்று ஒருமனதாக வலியுறுத்தியமையால் அதே நிர்வாகம் ஒரு சில மாற்றங்களுடன் மீணடும் தெரிவுசெய்யப்பட்டது. நிறைவாகப் பழைய மாணவர்களின் நிர்வாகத்திலுள்ள சுவையகம் நிறுவனத்தினரின் அறுசுவை உணவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

2018-2019 ஆண்டிற்கான புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் விபரம்:

சி. இளஞ்செழியன் (தலைவர்)
பொன் பஞ்சலிங்கம் (உபதலைவர்)
சு. சிவகுமார் (செயலாளர்)
ச. மேகவர்ணன் (உப செயலாளர்)
பொ. பாலசுந்தரம் (பொருளாளர்)

வை. செல்வம்
லோகன் சுந்தரம்
இ. உருத்திரகாந்தன்
சி. மகாபூரணன்
க. பாஸ்கரன்
பிரபு பொன்னம்பலம்
தி. இளமுருகன்
ச. தயாளன்
பொ. சௌந்தரராஜன்
வ. கந்தவேள்
இ. பாலச்சந்திரன் (கணக்குப்பரிசோதகர்)
மேலும் சங்கத்தின் காப்பாளர்களில் ஒருவராக பழைய மாணவரும் முன்னாள் யாழ் பல்கலைக்கழக விரிவுihயாளரும் சமூகப் பற்றாளருமான திரு. ந. பேரின்பநாதன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிற்குறிப்பு: சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் ஆவணி மாதம் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்