டொரண்டோ பியர்சன் விமானநிலையத்துக்கு கிடைத்துள்ள பெருமை

வட அமெரிக்காவில் பயணிகள் சேவையில் முதல்நிலையில் உள்ள மிகப்பெரிய விமான நிலையமாக, டொரண்டோ பியர்சன் அனைத்துலக விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள விமான நிலையங்களை வரிசப்படுத்தும் அனைத்துலக நிறுவனம் அண்மையில் வெளியிட்டு்ளள தரவரிசைப் பட்டியலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பயணிகள் சேவைய வழங்கும் விமான நிலையங்களுக்கான விருதுகளையும் அறிவித்துள்ள அந்த நிறுவனம்,

வட அமெரிக்காவில் டொரண்டோ விமான நிலையமும், ஐரோப்பாவில் ரோம் விமான நிலையமும், ஆசிய பசுபிக் வட்டாரத்தில் மும்பை விமான நிலையமும் முதல் இடத்தினைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

விமான நிலையங்களை சென்றடைவதற்கான இலகுத் தன்மை, விமான நிலையத்திற்குள் இலகுவில் தேவையான இடங்களுக்கு செல்லக்கூடிய நிலைமை, விமானப் பயணங்களுக்கு செல்லும் போது அங்கே முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், பாதுகாப்பு சோதனை முறைமைகள், கழிவறைகள், குளியலறைகள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பயணிகளிடம் இருந்து சேரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்