உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சாதக, பாதக நிலைமை தொடர்பான கருத்தறியும் நிகழ்வு…

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான சாதக பாதக நிலமை தொடர்பாகவும் மாவட்ட ரீதியில் கட்சியின் கள நிலைமை தொடர்பாகவும் கருத்தறியும் நிகழ்வுவொன்றும் ஞாயிற்றுக் கிழமை (11) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்புக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது பொதுமக்கள், கட்சியின் ஆதரவாளர்கள், அங்கத்தவர்கள், உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இதில் கருத்தறியும் குழுவின் தலைவர் கே.குகதாசன் (கனடா), இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரெட்ணசிங்கம், அம்பாறை மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மக்களிடம் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்