வவுனியா வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கான ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று காலை 9.45மணியளவில் பிரதேச செலயாளர் க. பரந்தாமன் தலைமையில் ஆரம்பமானது.
இன்று ஆரம்பமானஇன்றைய வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினரரும் முன்னால் சுகாதார அமைச்சருமானl ப. சத்தியலிங்கம், ம. தியாகராசா, கலந்துகொண்டுள்ளனர். ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திற்கு இணைத்தலைவர்கள் சமூகமளிக்காத நிலையிலும் பெரும்பாலன திணைக்களங்களின் பணிப்பாளர்கள் கலந்துகொள்ளாத நிலையிலும் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இவ்வாறு ஒரு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டமானது இணைத்தலைவர்கள் அற்ற நிலையிலும் குறிப்பிட்டளவு திணைக்களத்தலைவர்கள் அற்ற நிலையிலும் கூடும் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானங்கள் எடுப்பதற்கும் அதனை அமுல்ப்படுத்துவதற்கும் திணைக்களப்பணிப்பாளர்கள், இணைத்தலைவர்கள் சமூகமளித்திருப்பது மிகவும் அவசியமாகும் அவர்கள் அற்ற நிலையில் கூடும் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் பயனற்றதாகவே அமையவுள்ளதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இன்றைய வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், ம. தியாகராசா, பொலிசார். பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

வடமாகாணசபை உறுப்பினர் ஜ.ரி. லிங்கநாதன் கலந்துகொள்ளவில்லை என்பதுடன் பெருமளவான கதிரைகள் வெறிச்சோடிக்காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்