பரந்தனில் விபத்து நால்வர் வைத்தியசாலையில்

பரந்தனில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் பரந்தன் பூநகரி வீதியில் இன்று காலை தடம்புரண்டு  விபத்துக்குள்ளாகியுள்ளது .

வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட  நான்கு  பேர் காயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள்    கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து அதி வேகத்தினால் இடம்பெற்றுள்ளது என பொலிசார் தெரிவிக்கின்றனர் அத்துடன்  மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்