யாழ் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான கிரிக்கெட் விளையாட்டுக்கள்..!

யாழ்ப்பாணம் மானிப்பாய், அட்டகிரி மைதானத்தில் வங்கிகள்,நிதி நிறுவனங்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்ளுக்கு இடையே செவனஸ்ரார் விளையாட்டு கழகத்தினால் நடத்தப்பட்ட 06 பேர் கொண்ட 05 பந்து பரிமாற்றங்களை கொண்ட போட்டியில் 24 அணிகள் பங்கு பற்றி நிகழ்வு 10.03.2018 தொடக்கம் 13.03.2018 வரை நடைபெற்றது.

இதில் இறுதிப் போட்டிக்கு நெல்லியடி கொமர்சல் கிரெடிற் மற்றும் எசியா அசெட் கிளைகள் மோதப்பட்டவை.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொமர்சல் கிறெடிற் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதில் 02 விக்கட்களுக்கு 69 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் றஜீவன் அவர்கள் 43 ஓட்டங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எசியா அசெட் 41 ஓட்டங்களுக்கு சகல விக்கற்றுகளையும் இழந்து பிரதீபன் அவர்கள் 41 ஓட்டங்கள் பெற்று கொடுத்தார்.
இதன் மூலம் கொமர்சல் கிரெடிற் அணியானது 18 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. அதில் போட்டியின் ஆட்ட நாயகனகா நெல்லியடி ரஜீவன் அவர்களும், தொடர் ஆட்ட நாயகனாக யாழ்ப்பாணம் ஜெனுதாஸ் அவர்களும் முன்னிலையில் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்