மன்னார் பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்-

(13-3-2018)

மன்னார் பிரதேசச் செயலக பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் இயங்கும் ஆறு விளையாட்டுக்கழகங்களுக்கு சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

-நேற்று திங்கட்கிழமை(12) மாலை மன்னார் பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது குறித்த விளையாட்டு உபகரணங்களை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்ற அமைச்சர் ரி.எம்.சுவாமிநாதனின் இணைப்புச் செயலாளர் ஜே.பிரைமிளஸ் கொஸ்தாவினால் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிராமிய உட்கட்டமைப்பு விசேட வேளைத்திட்டத்தின் கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ.சமீயூ முகம்மது பஸ்மியின் வேண்டு கோளுக்கு இனங்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த விளையாட்டு உபகரணங்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.

-உப்புக்குளம்,பணங்கட்டுக்கொட் டு,பள்ளிமுனை,சௌத்பார்,தாழ்வுபா டு ஆகிய விளையாட்டுக்கழகங்கள்,மன்னார் மாவட்ட மெய்வல்லுனர் சங்க விளையாட்டுக்கழகம் போன்ற வற்றிற்கு குறித்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள்,கட்சியின் மன்னார் பகுதி முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்