போதுமான மழை வீழ்ச்சி இல்லாமையால் மின் உற்பத்தி பாதிப்பு

பல மாவட்டங்களில் சில பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க மழை பெய்த போதிலும் நீரேந்து பகுதிகளில் மின் உற்பத்திக்கு அவை போதுமானதல்ல என மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

tamilcnn.lk

இதன் அபிவிருத்தி பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில் ,

கடந்த சில தினங்களாக நாளாந்த மின்சார தேவை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

நீர் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் ஆறு பாரிய நீர்த்தேக்க பகுதியில் குறிப்பிடத்தக்க மழை வீழ்ச்சி இடம் பெறவில்லை என்று குறிப்பிட்டார்.

இருப்பினும் மின்சார துண்டிப்பின்றி மின் விநியோகத்தை மேற்கொள்ளவிருப்பதாக மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சு பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்