வவுனியா கோவிற்குளம்  கனேடிய பிரஜை ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா கோவில்குளம் பகுதியில் கனேடிய பிரஜையான ஆணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை குறித்த சடலம் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கனடா குடியுரிமை கொண்ட 83 வயதுடைய சத்தியசீலன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது சொந்த இடமான யாழில் உள்ள கோவில் ஒன்றின் உற்சவத்திற்கென தனது மனைவியுடன் கனடாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.
இதனடபோது வவுனியா, கோவில்குளம், சின்னப்புதுக்குளம், இரண்டாம் ஒழுங்கையில் வதியும் தனது மகனின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். நேற்றைய தினம் (12.03) குறித்த நபரின் மனைவி உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும், மகன் மற்றும் மருமகள் யாழில் இடம்பெற்ற உறவினர் ஒருவரின் மரண சடங்கில் கலந்து கொள்ள யாழ் சென்றிருந்த நிலையில்p குறித்த நபர் தனிமையில் இருந்துள்ளார்.
காலை வீடு நெடுநேரமாக திறக்கப்படாததை அவதானித்த அயல்வீட்டார் கதவினூடாக அறையை அவதானித்த வேளை குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இதேவேளை சடலத்தின் அருகில் நஞ்சு மருந்தும் காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர். மேலும் எதிர்வரும் ஓரிரு தினங்களில் கனடாவிற்கு மீள செல்ல இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்