இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீடு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டு விழா 14ம் திகதி புதன்கிழமை காலை 09.30 மணிக்கு மட்டக்களப்பு மாநகரசபை நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

 

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைகள், மதகுருமார்கள், இந்நாள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டியவர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன் போது கட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய சுதந்திரன் பத்திரிகையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக கட்சித் தலைமைகளால் வெளியிடப்படவுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் உருவாக்கப்பட்ட சுதந்திரன் பத்திரிகை நாட்டின் அசாதாரண நிலை காரணமாக வெளிவராத நிலையில் தற்போது அது புதிய பரிணாமத்தில் புதிய சுதந்திரன் எனும் பெயரில் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்