மஹிந்த தலைமையில் பொது எதிரணித் தலைவர்கள் கொழும்பில் இன்று பேச்சு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்கள் தெரிவு குறித்த வர்த்தமானி அறிவிப்பு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மஹிந்த அணியான பொது எதிரணியிலுள்ள கட்சித் தலைவர்கள் இன்று மாலை கொழும்பில் கூடவுள்ளனர்.

tamilcnn.lk

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அவரது இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கடந்த வாரம் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு பொது எதிரணி தீர்மானித்திருந்தாலும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் அந்த நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
எனினும், அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது பிரேரணையைக் கையளித்துவிட வேண்டும் என்பதில் பொது எதிரணி குறியாக உள்ளது. இது பற்றியே இன்றைய கூட்டத்தில் முக்கியமாக ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்