பால் பகல் நேரத்தில் குடித்தால் நல்லதா? இல்லை இரவு நேரத்தில் குடித்தால் நல்லதா?

பால் தண்ணியாக இருக்கிறது என்று சிலர் வருத்தப்படுவார்கள். ஆனால் பால் தண்ணீர் போல இல்லாவிட்டால் தான் அதன் தரத்தை பற்றி சந்தோகப்பட வேண்டும். ஏனென்றால் பாலில் 87 சதவீதம் தண்ணீர் தான் இருக்கிறது. 13 சதவீதம் இதர வேதிப்பொருள்.

இதில் 4 சதவீதம் கொழுப்பு. 9 சதவீதம் விட்டமின்கள் மற்றும் புரதம் தாதுப்பொருட்கள். இவைகள் தான் இருக்கிறது. இந்த நிலையில் உள்ள பால் தான் தண்ணீர் போல காட்சியளிக்கும். இதுதான் உடலுக்கும் நல்லது. பால் கொட்டியாக இருந்தால் ஜெலட்டின், மரவள்ளி கிழங்கு மாவு, ஜவ்வரிசி போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்ட பால் ஆக இருக்கக்கூடும். என பால் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக உடலுக்கு வேண்டிய கால்சியம் மற்றும் புரோட்டீனை பெற சிறந்த வழி தவறாமல் பால் அருந்துவது தான். ஆனால் பாலை எப்போது குடிப்பது நல்லது பகல் நேரத்தில் குடித்தால் நல்லதா? இல்லை இரவு நேரத்தில் குடித்தால் நல்லதா? என்ற சந்தேகம் எல்லோரும் இருக்கும்.

பாலை குறிப்பிட்ட நேரத்தில் குடிப்பதால் குறிப்பிட்ட நன்மைகள் கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எந்த நேரத்தில் குடித்தால் எந்த நன்மை கிடைக்கும் என இப்போது பார்க்கலாம்.

காலை உணவின் போது அதிக அளவில் புரோட்டீன் வேணுமானால் பாலை காலையில் குடிப்பது நல்லது. மேலும் பாலில் கால்சியம் மற்றும் புரோடினை தவிர பொட்டாசியம் மக்னீசியம் போன்ற பொருட்கள் உள்ளதால் பாலை காலையில் குடிப்பது நல்லது. காலையில் பசி எடுக்க கூடாது என நினைப்பவர்கள் காலையில் பால் குடிப்பது நல்லது. காலை பாலை குடித்து வயிறு உப்புசத்துடன் இருப்பதை அறிந்தால் காலையில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

இரவில் தூக்கம் வராமல் அவஸ்தை படுபவர்கள் பாலை காய்ச்சி குடிப்பதால் நல்ல தூக்கமும் நல்ல உடலும் ஆரோக்கியம் பெறும். எனவே பாலை எந்ந நேரத்தில் குடித்தாலும் நமக்கு மிகவும் நல்லது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்