ஒரு புறம் காட்டுத்தீயில் கருகிய பெண்கள்…மறுபுறம் காட்டில் சரக்கடிக்கும் பெண்கள்…!

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது மற்றவர்கள் மீட்கப்பட்டாலும், பலரும் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்களில் பெரும்பாலோனோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதற்காக இந்த பெண்கள் சென்றார்கள்..? உரிய அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளதா ? பாதுகாப்பு வசதி இல்லையா ? எங்கு தவறு நடந்தது..? அரசு எந்த நடவடிக்கை எடுத்து உள்ளது என்பது குறித்த பல விவாதங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில்,பெற்றவர்களுக்கு தெரியாமல் சில ஆண் நண்பர்களும்,பெண் நண்பர்களும் ஏதோ ஒருகாட்டு பகுதிக்குள் சென்று மது அருந்துகின்றனர்.

பள்ளி படிப்பை கூட முடிக்காத தோற்றத்தில் காணப் படும் இந்த மாணவிகள்,தங்களது ஆண் நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் தனிமையான இடத்திற்கு சென்று,இருசக்கர வாகனத்தில் அமர்ந்து ஸ்டைலாக மது அருந்துவது போல,உடன் வந்த ஆண் நண்பர் வீடியோ எடுத்து உள்ளார்.

இந்த வீடியோவில்,ஆண்கள் முகம் ஒருவரையும் கவர் செய்யாமல்,உடன் அழைத்து வந்த பெண் பிள்ளைகளை வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் உலவ விட்டு உள்ளனர் நம்பிக்கையான ஆண் நண்பர்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்