வைத்தியப்பரிசோதனையும் ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கு”

பைஷல் இஸ்மாயில்

சுதேச மருத்துவ அமைச்சினால் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கு” அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.எம்.அஸ்லம் தலைமையில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் நேற்று(13.03.2018) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

“போசாக்கு மற்றும் தொற்றா நோய்”  என்ற தொனிப் பொருளில் முதியவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கினை நேற்று காலை 9.00 மணி தொடர்க்கம் 11.00 மணிவரை இக்கருத்தரங்கு சிறந்த முறையில் நடைபெற்றது. இதில்அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள சுமார் 50 மேற்பட்ட ஆண், பெண்  உள்ளிட்ட இருபாலாரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.இதன் போது ஆயுள்வேத முறையில் தயாரிக்கப்பட்ட கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர்களான ஐ.எல்.அப்துல் ஹை, பர்வீன் முகைடீன், எஸ்.எம்.றிசாத், எல்.பஸ்மினா, எம்.எஸ்.சிஹானா, ஏ.ஆர்.எப்.ஆசிக்கா, எம்.ரீ.அமிறா உள்ளிட்டவைத்தியர்களின் பங்கு பற்றுதலுடன் விஷேட வைத்திய சேவையும் இதில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்