கருவி நிறுவனத்துக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

மாற்றுத்திறனாளிகளின் சமூக வள நிலையமான “கருவி” நிறுவனத்துக்கு தனது 2017ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டிலிருந்து வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனால் ரூ.75000/= பெறுமதியான அலுவலக தளபாடங்கள் மற்றும் மின்விசிறி என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

tamilcnn.lk

இன்று 14.03.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் யாழ்.கல்வியங்காட்டில் அமைந்துள்ள கருவி நிறுவனத்தில் மேற்படி பொருட்களை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் நிறுவன அலுவலர்களிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், கோப்பாய் பிரதேசசபை உறுப்பினர் சி.அகீபன், கருவி நிறுவன அலுவலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்