அனைத்துலக பெண்கள் நாளில் எழுச்சி கொண்ட பிரித்தானியா

அனைத்துலக பெண்கள் நாளான மார்ச் 8ம் நாளன்று அனைத்துலக பெண்கள் நாளாக உலகப்பரப்பெங்கும் கொண்டாடப்படுகின்ற வேளையில் பிரித்தானியாவில் ஒரு எழுச்சி பேரணி ஒன்று இடம்பெற்றிருந்தது.

அந்த வகையில் தாயகத்தில் பெண்கள் படுகின்ற சிரமங்களையும் வேதனைகளையும் சிறிலங்காஅரசாலும் இராணுவத்தாலும் தமிழ் பெண்கள் பாலியல் ரீதியாக பல சித்திரவதைகளை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறும் விதமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தன்னை இதில் இணைத்துக்கொண்டு இருந்தது. இதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் ஒழுங்கமைத்து இருந்தார். தமிழ் அமைப்புச் சேர்ந்த தமிழ் பெண்கள் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இலங்கைத்தீவில் தமிழ்ப்பெண்கள் காணாமல் போன தமது மகள்இ மகன்இ கணவன் என உறவுகளை தேடியலையும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தங்களின் அவல நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பொருட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று வரை பார்க்க முடியாத நிலையில் காணமல் ஆக்கப்பட்டுள்ளனர். தமிழர் பகுதிகளில் இருக்கும் இராணுவத்தினர் விகிதாசார அடிப்படையில் கூடுதலாகவே உள்ளனர் என்றும் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்