பஸ் சாரதியாக மாறிய திசர பெரேரா! (video)

இலங்கை – இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு-20 தொடர் கொழும்பில் நடைபெற்று வருகின்றது.

இதில் இலங்கை அணி தங்களது முதல் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியிருந்த நிலையில், ஏனைய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருந்தது.

அதுமாத்திரமின்றி இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட தினேஸ் சந்திமாலுக்கு, ஐசிசி இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. இதனால் இலங்கை அணியின் தலைமை பொறுப்பை திசர பெரேரா ஏற்றுள்ளார்.

இதேவேளை தற்போது இலங்கை அணியின் தலைவர் திசர பெரேரா அணிக்கு மாத்திரமின்றி, வீரர்களை அழைத்துச் செல்லும் பணியிலும் ஈடுபட்டுள்ள காணொளி சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.

இலங்கை அணி வீரர்களை போட்டிக்கு அழைத்துச் செல்லும் பஸ்ஸை திசர பெரேரா செலுத்திச் செல்லும் காணொளியே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

திசர பெரேரா சாரதியின் இருக்கையில் அமர்ந்திருந்து வீரர்களை ஏற்றுவது காணொளியில் பதிவாகியுள்ளது.

 

https://twitter.com/daniel86cricket/status/973605117000785920

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்