மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியின் அதிபருக்கு எண்ணங்கள் நிறைந்த பிரியாவிடை

(செட்டிபாளையம் நிருபர் -க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் அவர்களின்  காத்திரமான கல்விப்பணி,நல்லபல விடயங்கள் செய்திட்டு தனது 60 ஆவது வயதில் ஆசிரியர்கள்,அதிபர்கள்,மாணவர்கள்,கல்விசாரா ஊழியர்கள் மத்தியில் வெள்ளிக்கிழமை(16.3.2018) ஓய்வு பெற்றுச்சென்றார்.இவர் ஆசிரியராக,பகுதித்தலைவராக,அதிபராக,மண்முனை கோட்டக்கல்வி பிரிவுக்கான அதிபர்சங்கத் தலைவராக,மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்து நல்லபல விடயங்கள் செய்துவிட்டும்,அரசசேவையில் 41 வருடங்கள் அளப்பெரிய கடமையை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டுள்ளார்.
கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் அவருக்குரிய பிரியாவிடை செலுத்தும் நிகழ்வு அதிபர் இராசதுரை-பாஸ்கர் தலைமையில் வெள்ளிக்கிழமை(16.3.2018) நடைபெற்றது.
இதன்போது உப-அதிபர் எஸ்.சதீஸ்வரன் அவர்களின் வரவேற்புரையுடன் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் சிரேஸ்ட ஆசிரியர் கே.லோரண்ஸ்,ஆசிரியர் ரீ.கோபி,அதிபர் இ.பாஸ்கர்,பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளரும்,பொறியியலாளருமான வை.கோபிநாத்,மற்றும் மாணவர்கள் ஆகியோர்கள் அன்னாருடையை கல்விப்புல சாதனைகள் சம்பதமாக உரையாற்றினார்கள்.இதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் விமல்ராஜ் அவர்கள் தனது ஏற்புரையாற்றினார்.
முதலில் சுபவேளைக்கு கல்லூரியின் கல்விச்சமூகத்தால் மாலை அணிவித்து,மலர்சென்று வழங்கப்பட்டு,கல்லூரியின் கல்விச்சமூகம் புடைசூழ்ந்து மாணவர்கள் நிரையில் நின்று கைதட்டி புன்னகைத்து, பேண்ட்வாத்தியங்கள் இசைக்கப்பட்டு, கல்லூரிக்கு கௌரவமாக அழைத்துவரப்பட்டார்.இதன்போது கல்லூரி சமூகத்தால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்.முதல்வருக்கு கல்லூரியின் கல்விச்சமூகத்தால் ஞாபகார்த்த சின்னம்,பரிசுகள் வழங்கப்பட்டு கதாநாயகன் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் அவர்கள் கௌரவமாக பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது கல்லூரியின் முதல்வரது 60ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்