பிரித்தானிய வானிலை மையம் எச்சரிக்கை

பிரித்தானியாவில் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் மீண்டும் கடுங்குளிருடன் கூடிய பனிப்பொழிவு தாக்கும் என பிரித்தானிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவை நோக்கி சைபீரியாவில் இருந்து கிளர்ந்தெழும் கடுமையான குளிர்காற்று காரணமாக இந்த கடும் குளிரை பிரித்தானியா எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரித்தானியா முழுவதும் இக்குளிர்காற்று காரணமாக -2C உறைநிலை வானிலை ஏற்படும் என்றும் இன்று மாலை தொடக்கம் வாரஇறுதி வரை மழையுடன் கூடிய பனிப்பொழிவு லண்டன் மற்றும் இங்கிலாந்தின் தென்கிழக்கு, மிட்லாண்ட், ஸ்கொட்லாந்து பகுதிகளில் நிலவும் என எதர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, பனிப்பொழிவு 5cm முதல் 20cm வரையில் ஏற்படக்கூடும் எனவும் உறைநிலை வானிலையால் போக்குவரத்துக்கள் பாதிக்கப்படலாம் என்றும் முன்னறிவிப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, இம்மாத ஆரம்பத்தில் நிலவிய கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக பிரத்தானிய மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்