முன்மாதிரி பொலிஸ் நிலையமாக அட்டன் பொலிஸ் நிலையம் தெரிவு

அட்டன் கே.சுந்தரலிங்கம்

17.03.2018

அட்டன் பொலிஸ் நிலையம் இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட 42 முன்மாதிரி பொலிஸ் நிலையங்களில் அட்டன் பொலிஸ் நிலையமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அட்டன் தலைமையக பொலிஸ் பரிசோதகரத் ஏ.எல்.எம்.ஜெமில் தெரிவித்தார்.

இலங்கையின் பொலிஸ் சேவையினை புதிய சீர்திருத்திற்கு ஏற்படுத்தி மக்ளுக்கு நற்புடைய சேவையாக பெற்றுகொடுப்பதற்காக ஆசிய ஒன்றியம் (ஆசிய பதனம) செயத்திட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகிறது இதில் நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் பொலிஸ் நிலையம் தெரிவு செய்யபட்டுள்ளதாகவும் இதன் ;மூலம் சிறந்த பயனை பெற்று மக்களுக்கு சிறந்த சேவையினை பெற்றுக்கொடுக்க பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் முன்வரவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்மாதிரி பொலிஸ் நிலையம் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று பேராதனை பல்கலைககழகத்தின் சிரேட்ட விரிவுரையாளர் அனுரத்த பஸ்நாயக்க அவர்களின் தலைமையில இன்று 17.03.2018 ; நடைபெற்றது அதில் வரவேற்புரை நிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அசிய பதனம என்ற அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்கிழ்வுக்கு ஆசிய பதனம அமைப்பின் செயத்திட்ட ஆலோசகர் சிசிர குமார அட்டன் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் செயப்பாட்டு பொலிஸ் உத்தியோகஸ்த்தர் குமாரி உட்பட பொலிஸ் பரிசோதகர்கள் உத்தியோகஸத்தரத் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்