நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக பருத்தித்துறையில் கலந்துரையாடல்

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல் இன்று பருத்தித்துறையில் அமைந்துள்ள தமிழ் அரசுக் கட்சி தொகுதி கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் குகதாசன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கே. துரைராஜசிங்கம் மற்றும் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்து இருந்தனர்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டவேட்பாளர்கள், தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. நேற்று யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்