உணவகம் ஒன்றில் பொறுப்பான இடத்திலிருந்து கொண்டு பொறுப்பில்லாமல் புகைப்பிடிக்கும் நபர் – நெல்லியடியில் சம்பவம்

பொது இடத்தில் புகைபிடித்தல் தண்டனைக்குரிய குற்றம் என்பது அரசு சட்டம். உணவகத்திற்கு வருகைதரும் ஒரு வாடிக்கையாளர் உணவத்தில் புகைப்பிடிப்பதை தடுக்க கூடிய பொறுப்பான இடத்திலிருந்து கொண்டு இவர் பொறுப்பற்ற விதமாக தானே புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்.  “என்னை கேள்வி கேட்பதற்கு எவன் வரப்போகிறான்” என்பது போல் அமைக்கிறது இவரின் செயற்பாடு.

குறிப்பாக, வருகின்றவர்களிடம்  காசு வாங்குகின்ற கல்லாப் பெட்டிக்கு முன் நின்று கொண்டு இப்படி புகைப்பிடிப்பது என்கிற இவரின் மெத்தனச் செயற்பாடு உணவத்தின் வாடிக்கையாளர்கள்கள் சிலருக்கு அசொளகரித்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாது அவர்களை முகங்சுழிக்கவும் வைத்தது.

“புகைத்தல் கூடாது” என்று வாசகங்களில் மட்டும் எழுதி ஒட்டிவிட்டு இப்படியான செயற்பாடுகளில் ஈடுபடும் இவர் போன்றவர்கள் மீது சட்டம் தன் கடமையைச் செய்யுமா… பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்