உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தையிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் சைக்கிள் ஓட்டப்போட்டி

(றியாத் ஏ. மஜீத்)

விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தையிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக ஏற்பாட்டில் உத்தியோகத்தர்களுக்கிடையில் சைக்கிள் ஓட்டப் போட்டி இன்று (19) திங்கட்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சைக்கிள் ஓட்டப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, உதவி பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சைக்கள் ஓட்டப் போட்டியில் முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.எம்.ஜிப்ரி முதலாம் இடத்தையும், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ் இரண்டாம் இடத்தையும், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.சிபான் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்

இதன்போது போட்டியில் வெற்றி பெற்ற உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா உள்ளிட்ட அதிதிகள கைலாகு கொடுத்து வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்