வவுனியா ஓமந்தை நாவற்குளம் பாவட்டங்குள வீதி புனரமைப்பு

நீண்ட கால யுத்தத்தின் பின்னர் குடியேற்றப்பட்ட வவுனியா ஓமந்தை நாவற்குள கிராமத்தில் அமைந்துள்ள பாவட்டங்குள வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் மக்களின் நலன் கருதி புனரமைக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட 35 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வீதி சீரின்மையால் பல பிரச்சனைகளை எதிர் நோக்கி வந்துள்ளனர்.இந்நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கதிரவேலு கணேசலிங்கம் அவர்கள் தனது சொந்த நிதியைக் கொண்டு இவ் வீதியை புனரமைத்துள்ளார்.

இது பற்றி அக்கிராமத்தை சேர்ந்த மக்கள் தெரிவிக்கையில் பலர் தேர்தல் காலங்களில் வீதியை திருத்தி தருவோம் என வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள் தேர்தல் முடிந்த பின்பு யாரும் இந்த பக்கம் வரவில்லை பல சிரமங்களுக்கு மத்தியிலே இவ் வீதியால் எமது பிள்ளைகள் நோயாளிகள் வயோதிபர்கள் என பலரும் பயணம் செய்து வந்தனர்.

இந்நிலையில் தேர்தல் காலத்தில் தான் வழங்கிய வாக்குறுதியினை பதிவாளர் கணேசலிங்கம் செய்து முடித்துள்ளார் அவர் தேர்தல் காலத்தில் சொன்ன விடயங்களை செய்து வருகிறார்.அவரது சேவை இக்கிராமத்திற்கு வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்