மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பம்-(PHOTOS)

-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடைகள் இடம் பெற்று வருகின்றது.மாவட்டத்தில் விதைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அறுவடை இடம் பெறும் வரை உரிய மழை வீழ்ச்சி இன்மையினால் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட விவசாயிகள் தமது நெற்பயிர்ச்செய்கைக்கு நீர் இன்றி பல்வேறு சௌசகரியங்களை முகம் கொடுத்து வந்தனர்.
எனினும் தமது நெற்பயிர்களை ஓரலவாவது காப்பாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையில் பல ஆயிரம் ரூபாய் பணத்தை செலவழித்து தமது விவசாய காணிகளினுள் குழாய்க்கிணறுகளை அமைத்து தமது   பயிர்களுக்கு நீர் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் விவசாயிகளின் முயற்சியின் பலனாக தமது விவசாக செய்கை வெற்றியளித்துள்ள நிலையில் நெல் அறுவடையினையும் ஆரம்பித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு அமோக விளைச்சல் கிடைத்துள்ளதாகவும்,   ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொண்ட விவசாய செய்கையில் 55 மூடைகள் தொடக்கம் 58 மூடைகள் வரை நெல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும் உடனுக்குடன் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்ய தென்பகுதியில் இருந்து வருகை தந்து வியாபாரிகள் நெல்லை உரிய விலைக்கு கொள்வனவு செய்வதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்