மக்கள் மத்தியில் சமாதானம் ஏற்படும் வகையில் திறந்த வெளி பெரிய சிலுவைப்பாதை

அட்டன் கே.சுந்தரலிங்கம்

லிந்துலை கௌலஹென புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய பங்கு தந்தை அருட்பணி டொஸ்மின் ராஜ் ஏற்பாட்டில் பிரதேச மக்கள் மத்தியில் சமாதானம் ஏற்படும் வகையில் திறந்த வெளி பெரிய சிலுவைப்பாதை கடந்த 18.03.2018 அன்று நடைபெற்றது.

காலை 09 மணிக்கு அக்கரகந்தை தோட்ட பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட சிலுவைப்பாதை 12 மணியளவில் ஆலயத்தினை சென்றடைந்தது. அதனை தொடர்ந்து பங்கு தந்தை டொஸ்மின் ராஜ் தலைமையில் ஆலயத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.

இதில் அதிகமான விசுவாசிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்