சிற்றூழியர்களுக்கான பயிற்சி செயலமர்வு

(அப்துல்சலாம் யாசீம் )

கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப்பிரிவினால் திருகோணமலை மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் கடமையாற்றும் சிற்றூழியர்களுக்கான தொடர்பாடல் திறன் மற்றும் மனப்பாங்கை விருத்தி செய்தல் தொடர்பான பயிற்சி செயலமர்வு இன்று (22) 03ம் கட்டை உப்புவௌியிலுள்ள முகாமைத்துவ அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் அனைத்து அரச திணைக்களங்களிலும் கடமையாற்றும் அலுவலாக சிற்றூழியர்களின் தொடர்பாடல்,திறன் மற்றும் மனப்பாங்கினை விருத்தி செய்யும் நோக்கில் இப்பயிற்சி நடாத்தப்பட்டு வருவதுடன் பொதுமக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கும் நோக்கிலேயே இச்செயலமர்வு நடாத்தப்படுவதாக கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி பிரிவின் பணிப்பாளர் எம்.எம்.ஹலீதா தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை ,மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இப்பயிற்சி செயலமர்வினை நடாத்தவுள்ளதாகவும் இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பயிற்றுவிப்பாளராக கே.டி,பிரசாந்தன் மற்றும் இணைப்பாளரான என்.சிவச்செல்வன் பயிற்சி உத்தியோகத்தர் எம்.கே.சிறிதரன் மற்றும் திருகோணமலை மாவட்டத்தைச்சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட அலுவலக சிற்றூழியர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்