நிர்வாணக்காட்சியில் நடிப்பது எளிமையானதா? நடிகைகளின் அனுபவங்கள்!!

முந்தைய நாட்களை விட திரைப்படங்களில் நிர்வாணக்காட்சிகள் இடம்பெறுவது என்பது தற்போது சகஜமாகிவிட்டது. அதோடு இணையத்தில் சீரிஸ்களாக வெளிவரக்கூடிய கேம் ஆஃப் த்ரோன்ஸ் உட்பட பல சீரிஸ்களிலும் இப்படியான காட்சிகள் அதிகம் இடம்பெறுகிறது. உண்மையில் அந்த காட்சிகளை படமாக்குகிறார்களா? அல்லது கிராபிக்ஸ் செய்கிறார்களா? என்ற கேள்வி எல்லாருக்கும் இருக்கும் அதைவிட நிர்வாணமாக நடிக்கும் நடிகர் நடிகைகள் என்ன நினைப்பார்கள் அவர்கள் என்ன மாதிரியான சூழலில் அப்படி நடிக்கிறார்கள் என்பது தெரியுமா? டிவி மற்றும் சினிமாவில் பெண் கதாப்பத்திரங்களை ஏற்று செய்யக்கூடிய பெண்கள் கண்டிப்பாக இது போன்ற நிர்வாணக்காட்சிகளில் நடிக்க வேண்டியது எழுதப்படாத விதியாக இருக்கிறது, இங்கெல்லாம் இது சகஜம், நீ அப்படிநடிக்கவில்லை என்றால் உனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று பயமுறுத்தப்படுகிறது.

மேரி லூயிஸ் பார்க்கர், எம்மி ரோசம் போன்ற ஹாலிவுட் நடிகைகள் அடிக்கடி நிர்வாணக்காட்சிகளில் நடித்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் முழு மனதுடன் சந்தோச மனநிலையில் தான் செய்கிறார்கள் என்று அர்த்தமன்று. அதோடு , பெண்ணொருவர் நிர்வாணக் காட்சிகளில் நடிப்பதினால் எளிதாக விமர்சிக்கவும், சர்ச்சைகளை கிளப்பவும் முடிகிறது இங்கே நிர்வாணக்காட்சிகள் நடித்த சில பெண்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்

எமிலா க்ளார்கே : கேம் ஆஃப் த்ரோன்ஸில் இவர் நிர்வாணமாக நடித்திருப்பார். ஆனால் இதில் சீசன் 4 க்கு பிறகு நிர்வாணக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். செக்ஸ் காட்சிகள் மிகவும் நுட்பமாக இருப்பதாகவும் அதனால் அது போன்ற காட்சிகளில் நடிப்பதை குறைத்துக் கொள்ளப் போவதாக சொல்லியிருக்கிறார். கேம் ஆஃப் த்ரோன்ஸ் படத்தில் நிர்வாணமாக நடித்ததற்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் எமிலா.

கேட் வின்செல்ட் : டைட்டானிக் படத்தில் நிர்வாணமாக தோன்றியிருப்பார் கேட் . அந்த திரைப்படத்தில் நிர்வணாமாக ஓவியம் வரைய போஸ் கொடுத்திருப்பார். இன்றளவும் தன்னுடைய நிர்வாண ஓவியத்தை படத்தின் காட்சியிலிருந்து எடுத்து வந்து ஆட்டோகிராஃப் வாங்குகிறவர்கள் இருக்கிறார்களாம்! ஆனால் அதில் கேட் தன்னுடைய கையெழுத்து போட்டுத் தர மறுத்துவிடுவாராம். இது பெரும் தர்மசங்கடமான நிலையாக இருக்கிறது என்றிருக்கிறார் கேட். அதோடு பல வருடங்களுக்கு முன்னர் திரையில் வந்த காட்சிக்காக நிர்வாணமாக நடித்தேன் அதற்காக இன்றைக்கும் கூட என்னுடைய நிர்வாணப் படத்தை எடுத்து வைத்திருப்பது என்பது எந்த வகையில் நியாயம்?

நடாலியே போர்ட்மென் : முதலில் நிர்வாணக்காட்சிகளில் நடிப்பது தவறு இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தவர், அவருடைய நிர்வாண காட்சி பல்வேறு அடல்ட் இணையங்களில் பரவ தன்னுடைய கருத்தை திரும்ப பெற்றுக் கொண்டார். நிர்வாணமாக நடிப்பது குறித்து வெளிவரும் கருத்துக்கள் எல்லாம் என்னை அதிகமாக மனச் சோர்வை தருகிறது. அப்படி நடித்திருக்ககூடாதோ பெரிய தவறு செய்துவிட்டோமோ என்கிற குற்றவுணர்வைத் தருகிறது. செக்ஸ் என்பது நம் வாழ்க்கையின் ஓர் அங்கம், ஆனால் அதற்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன்…. திரையில் தோன்றுகிற பிற காட்சிகளை கடந்து செல்வது போல இந்த காட்சிகளையும் கடந்து செல்ல ஏன் முடியவில்லை என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

ஜெனிஃபர் லாரன்ஸ் : 2018 ஆம் ஆண்டு வெளியான த்ரில்லர் திரைப்படமான ரெட் ஸ்பேரோவில் இவர் நடித்திருப்பார். நிர்வாணக்காட்சியில் நடிப்பது முதலில் விசித்திரமான மிகவும் வினோதமாக தோன்றியதாகவும் பின் சகஜமாகிவிட்டது என்று சொல்லியிருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஒரு காட்சியில் பள்ளியில் எல்லா மாணவர்கள் மத்தியில் நிர்வணாமாக நிற்பது போன்ற ஒரு காட்சி வரும், முதலில் தயக்கத்துடன் நிர்வாணமாக நிற்கமுடியாமல் நெளிந்திருக்கிறார், சிறிது நேரத்தில் சகஜமாகி தைரியமாக நின்று விட்டாராம். இவர் தைரியமாக நிற்பதை பார்த்து எதிரில் உட்கார்ந்திருந்தவர்கள் நெளிய ஆரம்பித்து விட்டார்களாம். நாம் எதிர்கொள்வதில் தான் பிரச்சனை இருக்கிறது என்கிறார்.

மேரி லூயிஸ் பார்கர் : நிர்வாணக்காட்சிகளில் நடித்ததற்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார் இவர். இந்த இடத்தில் நிர்வாணமாக காட்சி வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ஆனால் இவர் நடித்திருக்கிறார் என்று பல புகார்கள் எழுந்தது. என் திரைப்படத்தின் இயக்குநர் இந்த காட்சியில் நீங்கள் உடைகளை களைத்து பாத் டப்பில் விழ வேண்டும் என்று காட்சியை வர்ணிக்கிறார், நான் நடிக்கிறேன். அப்படி நடிக்க நான் பெரிதாக விரும்பவில்லை தான் சரி அவர்கள் எடிட்டிங்கில் எடுத்துவிடுவார்கள் என்றுன் நினைத்தேன் ஆனால் அவர்கள் நீக்கவில்லை

ஹெலன் மிர்ரன் : எப்படி சொல்வது என்று தெரியவில்லை, திரைக்கு வந்த புதிதில் நிர்வாணக்காட்சிகள் எல்லாம் நடிக்கலாம் இதில் என்ன இருக்கிறது என்ற எண்ணம் இருந்தது ஆனால் இப்போது அந்த காட்சிகள் எல்லாம் தேவை தானா என்று யோசிக்கிறேன். நீங்கள் மட்டும் நிர்வாணமாக நிற்கும் போது தான் உங்களுக்கு கூச்சமாக இருக்கும், ஆனால் செட்டில் இருப்பவர்கள் பலரும் நிர்வாணமாக இருந்தால்? 1979 ஆம் ஆண்டு வெளியான காலிகுலா என்ற திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார், அதில் அப்படி நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை, காரணம் கதைக்களத்தின் படி நாங்கள் கேம்ப்புகளில் நிர்வாணமாக அடைத்து வைத்திருக்கும் காட்சி. அங்கே உடையுடன் இருந்தால் தான் நீங்கள் வித்யாசமாக தெரிந்திருப்பீர்கள்.

ஹலே பெர்ரி : மான்ஸ்டர்ஸ் பால் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக அகாதமி விருது வென்ற நடிகை இவர். அந்த திரைப்படத்தின் பெயரைச் சொன்னாலே நடிகர் பில்லி பாபுடன் மிகவும் ஆழமான செக்ஸ் காட்சிகளில் நடித்த சீன் தான் எல்லாருக்கும் நினைவுக்கு வருமாம் . அதே போல ஸ்வார்ஃபிஷ் என்ற திரைப்படத்தில் நிர்வாண காட்சியில் தோன்றியிருப்பார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில், நிர்வாணக்காட்சியில் நடிப்பது என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம், அதோடு அது அந்த கதைக்களத்திற்கும் தேவைப்பட்டிருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் பெண் நிர்வாணக்காட்சியில் நடிக்க முடிவெடுப்பது என்பது மிகவும் தைரியமான முடிவாகும். இந்த காட்சியில் நடிக்க சம்மதித்தற்கு இன்னொரு காரணமும் உண்டு, கதைப்படி என்னுடைய கதாப்பாத்திரம் அப்படி.

எமிலி ப்ளண்ட் : நிர்வாணக் காட்சிகளில் நடிக்க எல்லாம் அவ்வளவு பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில் காட்சியில் தேவைப்பட்டால் நடித்து தானே ஆகவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார், ஆனால் தாய்மை அடைந்த பிறகு இந்த எண்ணம் அடியோடு மாறியிருக்கிறது. குழந்தை பிறந்த பிறகு இனி நிர்வாணக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும் நெகட்டிவ் கதாப்பாத்திரங்களில் மற்றும் மிகவும் ஆக்ரோசமான காதாப்பாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்றும் சொல்லியிருக்கிறார். இனியும் நான் நிர்வாணக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் ஏனென்றால் இன்னும் நான் இளம் பெண் கிடையாது. முன்னால் அப்படி நடித்தேன் என்பதற்காக இப்போதும் அப்படியே நடிக்க வேண்டுமா என்ன? அதைவிட நிர்வாணக்காட்சிகள் எல்லாம் திரைப்படத்தில் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

நடாலியே டோர்மெர் : கேம் ஆஃப் த்ரான்ஸ் படத்தில் நடித்த நடாலியே டோர்மர் நிர்வாணமாக நடிப்பது ஒன்றும் தவறில்லை என்று சொல்லியிருக்கிறார் அதோடு நிர்வாணக் காட்சியில் பெண்கள் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை ஆண்களும் நடிக்கலாம் என்றிருக்கிறார். இவர் சொன்னது போல கேம் ஆஃப் த்ரோன்ஸில் ஏராளமான ஆண் நிர்வாணக் காட்சிகள் இடம்பெறும் செக்ஸ் என்பது நம் இயல்பு வாழ்க்கையில் கடந்து செல்லக்கூடிய ஒன்று தானே…. பிறகு, சினிமாவில் இயல்பு வாழ்க்கையை காட்சிப் படுத்தும் போது செக்ஸ் இருக்ககூடாது என்று சொல்வது எப்படி நியாயமாகும்?

க்றிஸ்டென் ஸ்டீவார்ட் : ட்வலைட் சீரிஸின் ஒரு காட்சியில் தெருவில் நிர்வாணமாக நிற்பது போன்ற ஒரு காட்சி வரும்,இங்கே அதுவும் நிர்வாணமாக முடியவே முடியாது என்றிருக்கிறார், திரைத்துறைக்கு நுழைந்து மிகவும் தர்மசங்கடமான காலகட்டமது என்று நினைவுகூர்கிறார். ஆனால் ஒரு வழியாக அந்த காட்சியில் நடித்துவிட்டிருக்கிறார். அந்த காட்சியை இப்போது பார்க்கையில் மிகவும் வினோதமாக இருக்கிறது யார் அது? அது நான் தானா….. எப்படி நிர்வாணமாக நடிக்க சம்மதித்தேன் என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஒலிவியா வைல்ட் : இதில் எந்த கூச்சமும் இல்லை என்கிறார். மிகவும் இயல்பாக சிரித்த முகத்துடன் நிர்வாணக் காட்சியில் நடிப்பேன் என்கிறார் ஒலிவியா. பிறர் செய்யத் தயங்குகிற விஷயத்தை நாம் தைரியமாக முன்னெடுத்து செய்கிறோம் என்பதில் பெருமை இருக்கத்தானே செய்யும் என்கிறார்.

ஜெசிகா அல்பா : நிர்வாணத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கிறார். நிர்வாணமாக போஸ் கொடுப்பது என்பது தேவையற்ற ஒன்று, நம்முடைய உடலை ஏன் பிறருக்கு காட்ட வேண்டும்….. உங்கள் பெற்றோரோ அல்லது தாத்தா பாட்டியோ உங்களை பொது இடத்தில் நிர்வாணமாக பார்த்தால் எப்படி உணர்வார்கள்? பிறரைப் போல அவர்களும் ரசிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

டகோடா ஜான்சன் : 50 ஷேட்ஸ் ஆஃப் க்ரே எனும் திரைப்படத்தில் நிர்வாணக்காட்சியில் தோன்றியவர் இவர், கதைப்படி அவர் பல முறை நிர்வாணமாக தோன்ற வேண்டும். அதற்கு சம்மதித்து தான் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் நிர்வாணமாக நிற்பது நடிப்பது ஒன்றும் தனியறையில் அல்ல என்பதால் மிகவும் தயக்கம் காட்டினார். உடன் நடித்த நடிகர்களும் நிர்வாணமாக நடிக்க இவருக்கு கொஞ்சம் சகஜமாகியிருக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்