‘வலி சுமந்த திருமகன்’ திருப்பாடுகளின் காட்சி

வவுனியா தூய அந்தோணியார் ஆலயத்தினால் வழங்குகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையான ‘வலி சுமந்த திருமகன்’ திருப்பாடுகளின் காட்சி இம்மாதம் 25ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு ஆலய முன்றலில் 120 அடி நீளமான மாபெரும் அரங்கில் இடம்பெறவுள்ளது.

பிரமாண்டமான அரங்க அமைப்பு, காட்சியமைப்பு, இசையமைப்பு, ஒலி, ஒளி போன்றவற்றுடன் அரங்கிலும் அரங்கப் பின்னணியிலுமாக இருநூறுக்கும் அதிகமான கலைஞர்களுடன் மேடையேற்றப்படவுள்ள ‘வலி சுமந்த திருமகன்’ ஆற்றுகைக்கான ஏற்பாடுகள் இப்பொழுது இடம்பெற்று வருகின்றன.

இவ்வாற்றுகை 20 ஆண்டுகளுக்கு முன் மேடையேற்றப்பட்டு இவ்வாண்டுடன் மூன்றாவது தடவையாக மேடையேற்றப்படுகின்றது. இம்முறை இதற்கான நெறியாள்கையை கலாபூசணம் செ.மாசிலாமணி மேற்கொண்டுள்ளார்.

இதனை கண்டு இறைவனின் அருளை பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது ஆலய நிர்வாகத்தினர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்