சாய்ந்தமருது பிரதேச செயலக ஏடிஎஸ் இலவன் அணி வெற்றி

(றியாத் ஏ. மஜீத்)

விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தின் மூன்றாவது நாளை முன்னிட்டு மென்பந்து கிரிக்கெட் போட்டி சாய்ந்மருது பிரசேத செயலக ஏடிஎஸ் இலவன் அணிக்கும் ஏடிபீ இலவன் அணிக்குமிடையில் இடம்பெற்றது.

இப்போட்டியினை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.

ஏடிஎஸ் இலவன் அணி உதவிப் பிரதேச ஐ.எம்.றிகாஸ் தலைமையிலும் ஏடிபீ இலவன் அணி உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர் தலைமையிலும் களமிறங்கியது.

அணிக்கு 11 பேர் கொண்ட 12 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டி இன்று (22) வியாழக்கிழமை சாய்ந்தமருது வொலிவேரின் அஷ்ரஃப் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஏடிஎஸ் இலவன் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது.

முதலில் துடுப்பெடித்தாடிய ஏடிபீ இலவன் அணி 12 ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 108 ஓட்டங்களை பெற்றது.

இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம்.அசீம் 42 ஓட்டங்களையும், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.எம்.சலுபீன் 21 ஓட்டங்களையும், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.இஸ்ஸதீன் 18 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஏடிஎஸ் இலவன் அணியினர் 10.1 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

அலுவலக உதவியாளர் ஏ.எம்.ஜஹான் 29 ஓட்டங்களையும், உளவளத்துறை உத்தியோகத்தர் எல்.ரீ.எம்.இயாஸ் 28 ஓட்டங்களையும், உதவி பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

வெற்றி பெற்ற ஏடிஎஸ் இலவன் அணிக்கு வெற்றிக் கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்