அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் விசேடசெயற்குழுக் கூட்டம்

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் விசேடசெயற்குழுக் கூட்டம் 7.04.2018 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ் வண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்த தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை தலமையில் இடம்பெறவுள்ளது.

இவ் செயற்குழுக்கூட்டத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சை நடத்துவது மற்றும் ஒழுங்கமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளமையினால் அனைத்து செயற்குழு உறுப்பினர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் எஸ்.ரி.குமரன் அறிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்