சிரஞ்சீவி- நயன்தாரா திருமணம்!!

சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பின் ஒளிப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் வரலாற்றுப் படமாக உருவாகி வரும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. மல்ட்டி ஸ்டார் படமாக உருவாகி வரும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இது சிரஞ்சீவியின் கேரியரில் 151- ஆவது படமாம். ‘கொனிடேலா புரொடக்ஷன் கம்பெனி’ நிறுவனம் சார்பில் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார். இதற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்திற்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு படம் தாமதமானதால் வெளியேறினார்.

தற்போது இசையமைக்க அமித் திரிவேதியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சமீபத்தில், துவங்கிய படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெறுகிறது. இதில் அமிதாப் பச்சன் முற்றிலும் வித்தியாசமாக ஒரு யோகியின் தோற்றத்தில் உள்ளனர். இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் சிரஞ்சீவி, நயன்தாரா திருமணம் நடைபெறுவது போல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த ஒளிப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்