அரியாலை சுதேசிய திருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்டுவரும் கரப்பந்தாட்டத் தொடர்

அரியாலை சுதேசிய திருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்டுவரும் கரப்பந்தாட்டத் தொடரில், ‘பி’ பிரிவில் சண்டிலிப்பாய் இந்து இளைஞர் அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது.

திருமகள் சனசமூக நிலைய மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், சண்டிலிப்பாய் இந்து இளைஞர் அணியை எதிர்த்து பாரதி அணி மோதியது. முதல் இரண்டு சுற்றில் சண்டிலிப்பாய் இந்து இளைஞர் அணி 25:23, 25:22 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது.

25:23, 25:20 என்று அடுத்த இரண்டு சுற்றுகளையும் கைப்பற்றி பதிலடி கொடுத்தது பாரதி அணி. முதல் நான்கு செற்களின் நிறைவில் இரண்டு அணிகளும் தலா இரு வெற்றியைப் பெற்றிருந்தன.

இறுதி சுற்றில் வெற்றி பெறும் அணியே இறுதியாட்டத்துக்குத் தகுதி பெறும் என்ற நிலை அந்த செற்றை 15:11 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி 3:2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்குத் தகுதி பெற்றது சண்டிலிப்பாய் இந்து இளைஞர் அணி.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்