சுவிஸில் வெடிப்பு..15 பேர் காயம்…!

சுவிஸ் நகரின் மையப்பகுதியில் உள்ள இத்தாலிய உணவகம் லெஸ் டில்லுல்ஸில் சனிக்கிழமையன்று வெடித்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் காயமடைந்தனர்.இது பற்றிமீட்பு சேவைகள் கேப்டன் ஃப்ரெட்ரிக் ஜாக்ஸ் கூறும்போது, ஜெனீவா தடயவியல் பொலிஸ் வெடிப்புக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தியதில் ஒரு சிறிய எரிவாயுக் குழாய் வெடித்ததால் இவ்விபத்து நடந்திருக்கிறதாகத் தெரிவித்தார்.ஒரு சிறிய அளவிலான குப்பியில்எரிவாயுவை நிரப்பி இனிப்புகள் செய்யப் பயன்படுத்துவார்கள். அந்த சிறிய குப்பிதான் இந்தப் பெரிய விபத்துக்கான காரணமாக மாறியிருக்கிறது என்றும் ஜாக்ஸ் கூறினார்.அதன் எரிவாயு மிக சிறிய அளவுஇருந்தாலும் இதன் பின்விளைவுகள் அபாயமாக இருந்திருக்கிறது.

இந்த வெடிப்பின் போது அங்குள்ள ஜன்னல்கள் வெடித்து கண்ணாடிகள் சிதறியுள்ளன.சமையலறை பகுதி முற்றிலும் அழிக்கப்பட்டு மற்றும்வெடித்த நேரத்தில் அங்கு வேலை செய்யும் இரண்டு பேர் தீ காயம் அடைந்த இந்த விபத்தில் மொத்தத்தில், 15 பேர் காயமடைந்தனர், இதில் எட்டு பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
21 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மற்றமீட்பு பணியாளர்கள், 12 வாகனங்கள், மற்றும்ஐந்து ஆம்புலன்ஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டன என்றும் இதுபோன்ற தீ விபத்துக்கள் அவ்வப்போது நடந்தாலும் உணவகத்தில் நடந்தது இதுவே முதல் முறை என்கிறார் ஜாக்ஸ்.
இந்த விபத்தினால் உயிர் சேதம் ஏதும் நிகழவில்லைஎன்று தெரிய வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்