பிரதேச அமைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்து செய்தி…

தமிழ் மக்களும் சிங்கள மக்களும் தொன்றுதொட்டு தமது கலாசாரப் பாரம்பரியங்களுடன் ஒன்றாகக் கொண்டாடும் பண்டிகையாக இந்தச் சித்திரைப் புதுவருடம் திகழ்ந்து வருவதுடன் ஒவ்வொரு புத்தாண்டும் பிறக்கும்போது புதிய புதிய எதிர்பார்ப்புக்களையும், மாற்றங்களையும் புத்தாண்டு கொண்டுவரவேண்டுமென அதனை வாழ்த்தி வரவேற்பதும் எமது பண்பாடாக இருந்து வருகிறது.
பிறக்கப்போகும் இந்த விளம்பி வருடமும் மக்கள் மனங்களிலுள்ள துன்ப இருள் அகற்றி சாந்தி,சமாதானம், சௌபாக்கியம், சுபீட்சம் நிறைந்த ஆண்டாக மலர்வதுடன் அனைவரும் ஐக்கியத்துடனும் புரிந்துனர்வுடனும் நாட்டைக் கட்டியெழுப்பி அதன் மூலம் அமைதியான வாழ்வும் நிலையான மகிழ்ச்சியும் அடைய வழிசெய்யும் ஆண்டாக இப்புத்தாண்டு மலரப் பிராத்திப்பதுடன் அனைத்து உள்ளங்களுக்கும் எனது இனிய புதுவருட நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு.வீ.கிருஷ்ணமூர்த்தி
காரைதீவு பிரதேச அமைப்பாளர்
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்