19 ஆம் திகதி ஐ.தே.கட்சியில் மாற்றம்! அலரி மாளிகையில் எடுக்கப்பட்ட தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பதவிகள் 19 ஆம் திகதி நிரப்பப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட அரசியல் சபை கடந்த வாரம் அலரி மாளிகையில் முதன்முதலாக கூடியது.

இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

19 ஆம் திகதி எடுக்கப்படும் முடிவானது ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டத்தில் உத்தியோகபூர்வ­மாக அறிவிக்கப்பட உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புக்கான அரசியல் சபை கடந்த 7ஆம் திகதி நியமிக்கப்­பட்டது.

ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் உப தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோர் இச்சபைக்கு பதவி வழியாக நியமனம் பெற்றுள்­ளனர்.

அத்துடன் நவீன் திசாநாயக்க, அகில விராஜ் காரியவசம், மங்கள சமரவீர, ரஞ்சித் மத்தும பண்டார, ஹரின் பெர்னாண்டோ, ருவன் விஜேவர்தன, அஜித் பீ பெரேரா, இரான் விக்ரமரட்ன, ஜே. சி. அலவத்துவல, நளின் பண்டார, அசோக பிரியந்த ஆகியோரும் அரசியல் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.

இதேவேளை, அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம், தவிசாளர் மலிக் சமரவிக்ரம, பொருளாளர் எரான் விக்ரமரட்ன ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்