பிரித்தானியாவை சென்றடைந்தார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவை சென்றடைந்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

நேற்று இரவு ஜனாதிபதி பிரித்தானியாவை சென்றடைந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

கட்டார் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றில் ஜனாதிபதி உள்ளிட்ட பத்து பிரதிநிதிகள் நேற்று லண்டன் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

இன்று முதல் எதிர்வரும் 21ம் திகதி வரையில் இந்த மாநாடு லண்டனில் நடைபெறவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்