மஹிந்த வீட்டுக்குள் நடந்த விநோதம்! தென்னிலங்கையில் பரபரப்பு

சிங்கள புத்தாண்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது குடும்பத்துடன் மிக சிறப்பாக கொண்டாடினார்.

தங்காலை கால்டன் வீட்டில் மஹிந்த தலைமையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

தென்பகுதியை சேர்ந்த கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தம் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்த கொண்டாட்ட நிகழ்வின் போது இலங்கையின் அரசியல் தளத்தில் அதிகம் பேசப்படும் விடயங்களை அடிப்படையாக வைத்து விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்ட லெம்போகினி போன்ற விளையாட்டு கார்களும், ஹெலிகொப்டர்கள் மற்றும் குதிரைகள் பரிசாக வழங்கப்பட்டன.

மஹிந்தவின் புத்தாண்டு நிகழ்வில் முட்டி உடைத்தல் போட்டிக்கு மத்திய வங்கியை உடைத்தல் என பெயரிடப்பட்டுள்ளது. பலூன் ஊதல் போட்டிக்கு கூகிள் வைபை பலூன் என பெயரிடப்பட்டுள்ளது.

கயிறு இழுத்தல் போட்டிக்கு ஆளும் கட்சிகள் இரண்டினது பெயர் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மத்திய வங்கியில் பகலில் கொள்ளையடித்த திருடன் என்ற பெயரில் கண்ணாமூச்சி விளையாடப்பட்டுள்ளது.

யானைக்கு கண் வைக்கும் போட்டியை குதிரைக்கு கண் வைக்கும் போட்டி என பெயரிடப்பட்டுள்ளது. மாவுக்குள் நாணயம் தேடும் போட்டியினை லெம்போகினி தேடும் போட்டி என பெயரிடப்பட்டுள்ளது.

மஹிந்தவின் வீட்டில் நடைபெற்ற விநோதமான விளையாட்டுக்கள் குறித்து தென்னிலங்கையில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்