வவுனியாவில் உண்மையில் வெற்றி பெற்றுள்ளீர்களா நகரசபையில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. lll

இன்று 10.00 மணிக்கு வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் நடந்தது.

இதன்போது, பகிரங்க வாக்கெடுப்பா, இரகசிய வாக்கெடுப்பா என்பதை தீர்மானிக்க நடந்த வாக்கெடுப்பில், பகிரங்க, இரகசிய வாக்கெடுப்பிற்கு அதிக வாக்குகள் கிடைத்ததன் அடிப்படையில் வாக்கெடுப்பு நடந்தது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சேனாதிராசாவிற்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக்கூட்டணியின் கௌதமனிற்கு 11 ஆதரவாக வாக்குகளும் கிடைத்தன. இதனடிப்படையில் கௌதமன் தவிசாளராக தேர்வானார்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் கௌதமனிற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். தமிழரசுக்கட்சியின் சேனாதிராசாவிற்கு ஐ.தே.கவின் ஒரு உறுப்பினர் ஆதரவளித்தா

வவுனியா நகரசபை உபதலைவராக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் குமாரசாமி தெரிவாகியுள்ளார். அவரை தமிழர் விடுதலைக்கூட்டணியும் ஆதரித்தது.

அவரை எதிர்த்து போட்டியிட்ட புளொட் அமைப்பின் முக்கியஸ்தர் சந்திரகுலசிங்கம் (மோகன்) 9 வாக்குகளையே பெற்றார். குமாரசாமி 11 வாக்குகளை பெற்றார்.

வவுனியா நகரசபையில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. lll
ஐ.தே.கட்சியின் பெண் வேட்பாளரை, ரிசாட்டின் தம்பி கடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு!

வவுனியா நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கே.கருணாதாச வாக்களித்ததுடன், அமைச்சர் ரிசாட் பதியுதீனின் தம்பி றிப்கான் ஐ.தே.கட்சியின் பெண் வேட்பாளரை கடத்தி சென்று ஆதரவாக வாக்களிக்கச் செய்ததாக குற்றஞ்சாட்டினார்

இதேவேளை, ஐ.தே.கவின் பெண் உறுப்பினரை ரிசாட் பதியுதீன் தரப்பினர் கடத்தி சென்றே ஆதரவாக வாக்களிக்க வைத்ததாக, ஐ.தே.கவின் வவுனியா அமைப்பாளர் அங்கு பரபரப்பு குற்றம் சுமத்தினர்.

ஆனால் அங்கு வந்த ரிசாட் பதியுதீனின் தம்பி அதை நிராகரித்து, குறிப்பிட்ட பெண் வேட்பாளரை ஊடகங்களிடம் பேச செய்தார். அந்த குற்றச்சாட்டை அந்த பெண்ணும் மறுத்தார்.

இதன்பின் ரிசாட் பதியுதீனின் தம்பிக்கும், ஐ.தே.கவின் அமைப்பாளருக்குமிடையில் கைகலப்பு ஏற்படும் நிலையேற்பட, அங்கிருந்தவர்கள் நிலைமையை சமாளித்தனர்                       வவுனியாவில் உண்மையில் வெற்றி பெற்றுள்ளீர்களா ? சற்று சிந்தித்து பாருங்கள் .

தமிழர்கள் அதிகளவு வாழும் பிரதேசத்தில் தமிழ் தலைமையை கொண்டுவர போராடவேண்டி உள்ளது எனில் இது வெற்றியா ??

தமிழ் தேசிய அரசியல் என்பது 40வருடங்களுக்கு மேலாக தமிழர் மத்தியில் முன்னெடுக்கப்படுவதுடன் வெற்றிபெற்று வரும் அரசியலாக இருந்தும் கிழக்கை தமிழ் தலைமைத்துவம் இழந்துள்ளதுடன் வடக்கிலும் வவுனியா மற்றும் மன்னாரில் தோல்வியடைந்துள்ளதுடன் தமிழ் தலைமைத்துவமும் கைநழுவியுள்ளது எனில் இது எப்படி சாத்தியம் என்று சிந்திக்க வேண்டாமா ?

இனிவரும் அடுத்த தலைமுறை இளைஞர்களாவது இதனை ஆராய்ந்து பிழையானவற்றை கலைந்து சரியான தலைமைத்துவத்தை மக்களுக்கு வழங்கவேண்டும்.

உணர்ச்சிகளை தூண்டுவதும், பிழைகளை சுட்டிக்காட்டுவதும் அரசியலோ சிறந்த தலைமைத்துவத்துக்கான தகுதியோ இல்லை ஒவ்வொரு குறைபாடுகளையும் கண்டறிந்து அதற்கான தீர்வை ஆராய்ந்து அத்தீர்வை எட்டுவதற்கான ஒரு பாதையை கண்டறிந்து அதனை மக்களிடம் எடுத்துக்கூறி தீர்வினை எட்டுவதே சிறந்த அரசியலாகவும் தலைமைத்துவத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது..

துரதிஷ்டவசமாக இப்படியான தலைமைத்துவத்தை தமிழர்கள் தரப்பு இதுவரை கண்டதில்லை. இனிவரும் இளைஞர்களாவது இக்குறையை நிவர்த்தி செய்ய பாடுபடவேண்டும் அது வவுனியாவில் இருந்து ஆரம்பிக்கவேண்டும் என்று அவா

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்