திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேசசைபயும் த.தே.கூ.வசமானது

வ. ராஜ்குமாா்
திருகோணமலை பட்டணமும் சூழலும் (உப்புவெளி); பிரதேசசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமானது.இன்று இடம் பெற்ற தலைவர் தெரிவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் வைத்திய காலாநிதி ஞானநாயகம் ஞானகுணாளன் தெரிவு செய்யப்படார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்தும் 50 வீதத்திற்கும் அதிகமான ஆசனங்களை எந்த ஒரு அரசியல் கட்சிகளும் வென்றேடுக்காத சபைகளில் அமர்வு இடம் பெற்று வருகின்ற நிலையில் இன்று 16ம் திகதி மாலை 2.30 அளவில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேசசபையின் அமரவு; கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் சலீம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது தலைவர்; தெரிவு இடம் பெறுகையில் தலைவராக மூன்று பேர் முன்மொழியப்பட்டனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஞானநாயகம் ஞானகுணாளன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இன்னுமொரு உறுப்பினரான கந்தசாமி கோணேஸ்வரன் மற்றும் ஸ்ரீலாங்கா பொதுஜன பெரமுன சார்பில் சந்துன் ரெட்னாயக்க ஆகியோர் முன் மொழியப்பட்ட போது
வாக்களிப்பு இடம் பெற்றது.வாக்கெடுப்பிற்கு முன்னர் இரகசிய வாக்கெடுப்பா அல்லது பகிரங்க வாக்கெடுப்பா என்பதை தீர்மானிக்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.இதில் 11 வாக்குகள் பகிரங்க வாக்கெடுப்பக்கும் 11 வாக்குகள் இரசகிய வாக்கெடுப்புக்கும் கிடைத்தது.எனவே இதில் வாக்குச் சீட்டை யார் எடுப்பது என்பதை தீர்மானிக்க சீட்டெடுப்பு இடம் பெற்றது.இச்சீட்டெடுப்பில் வைத்திய காலாநிதி ஞானநாயகம் ஞானகுணாளன் தெரிவு செய்யப்படார்.
அதன் பின்னர் முன்மோழியப்பட்ட மூவருக்கும் இடையே வாக்கெடுப்பு இடம் பெற்றது.இந்த வாக்கெடுப்பில் வைத்திய காலாநிதி ஞானநாயகம் ஞானகுணாளன் அவர்களுக்கு தபால் பெட்டியில் போட்டியிட்டு வென்ற சுயேட்சைக்குழு ஈழமக்கள் ஜனநாயக கட்சி தமிழர் ஜனநாயக கட்சி ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியோர் வாக்கிளித்து 15 வாக்குகள் கிடைத்தது. ஸ்ரீலாங்கா பொதுஜன பெரமுன சார்பில் சந்துன் ரெட்னாயக்க அவர்களுக்கு ஸ்ரீலாங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வாக்களும் சேர்ந்து  07 வாக்குகளும் கிடைத்தது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்ட்ட கந்தசாமி கோணெஸ்வரநாதன் எந்த வாக்ககளையும் பெறவில்லை தனது வாக்கையும் வைத்திய காலாநிதி ஞானநாயகம் ஞானகுணாளன் அவர்களுக்க வழங்கியிருந்தார்.
இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் வைத்திய காலாநிதி ஞானநாயகம் ஞானகுணாளன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து தலைவர் வைத்திய காலாநிதி ஞானநாயகம் ஞானகுணாளன் அவர்களின் தலைமையில் உபதலைவரின் தெரிவு இடம் பெற்றது.இதில் சுயேட்சைக்குழு (தபால் பெட்டி) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கைலைநாதன் வைரவநாதன எவ்வித போட்டியிம் இன்றி முன்மொழியப்ட்டு தெரிவு செய்யப்பட்டார்.
இக் கூட்டத் தொடருக்கு பார்வையாளர்களாக எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்