எம்முடையது

முகில் தோய்ந்த
வானத்தில் நீந்திக்கொண்டிருந்தாய்
ஒரு நட்சத்திரமாய்!

நீல அலைக்குள்
மடியும் வெள்ள அலை
நாம் கூவிக்கத்திய சொற்கள்!

உனது நண்பி
சென்று திரும்பாத வழியில்
எனது தோழனும் பயணப்பட்டுவிட்டான்!

தோள் காயங்கள்
எமது தேசத்தின்
வடுக்கள் என்று யாரும்
நம்பப்போவதில்லை!

இடித்தரிக்கும்
நிழலில் தொலைத்தோம்
எமது உள்மனக்கிடக்கையை!

அலைந்த துப்பாக்கி
முனைக்குள்
மடிந்தது மூன்றுகட்டங்கள்!

இனி நான்காவது
கட்டத்தில்
அரசியல் ஆவணத்திலிருந்து
தேடிப்பெறுவோம்
எமது பட்டாம்பூச்சிகளின்
சுதந்திர வெளியை!

அதற்கா
விடியல் சாற்றும்
எதிரில் வளர்ந்துகொண்டிருக்கு
நம்பிக்கையானவர்களுக்கு
நம்பிக்கை மலைகள்!..

ஜெ..ஈழநிலவன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்