மைத்திரிக்கு எதிராக லண்டனில் ஒன்றுகூடிய தமிழர்கள்

லண்டனில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒன்றுதிரண்டு கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளார்.

இந்த போராட்டம் தொடர்பாக யதுர்சன் சொர்ணலிங்கம் என்ற ஊடகவியலாளர் தெரிவிக்கையில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு(TYO) ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசின் (TGTE) பூரண ஒத்துழைப்புடன் இன்றைய தினம் மதியம் 1.00 க்கு லண்டன் மல்பிரோ ஹவுஸ் என்ற இடத்தில் பொதுநலவாய மாநாடு நடைபெற்ற மண்டபத்திற்கு எதிராக இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வடக்கு கிழக்கில் தமிழர் தாயக பகுதியில் இன்றைக்கு 1 வருடத்திற்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அது தொடர்பாக எந்தவொரு தீர்வினையும் இந்த அரசு எடுக்கவில்லை இதனைவிட பல்லாண்டுகளாக விசாரணைகள் ஏதுமின்றி சிறைகளில் வதைபட்டுக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழ் மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவொரு கரிசனையும் இந்த நல்லாட்சி அரசு காட்டவில்லை.என பல்வேறு குற்றச்சாட்டுக்களை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிரதான கோஷங்களாக இருந்தது.

இன்று ஒரு வேலை நாளாக இருந்தபோதும் நிறைவான லண்டன் வாழ் தமிழ் மக்கள் கந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யதுர்சன் சொர்ணலிங்கம்
லண்டன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்