அன்னைபூபதியின் நினைவு அஞ்சலியும் !அவரின் பிள்ளைகளின் சின்னத்தனமும்!

அன்னைபூபதித்தாயாரின் முப்பதாவது நினைவு வணக்கம் உணர்வுபூர்வமாக நடத்துவதற்கு மட்டக்களப்பு நாவலடி கடல்கரையில் அமைந்துள்ள அன்னாரின் கல்லறை சதுக்கத்தில் கடந்த 19/04/2018 வியாழக்கிழமை பல்வேறுபட்ட பொது அமைப்புகள் அஞ்சலிகளை செலுத்தின இதில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி அம்பாறை திருக்கோயில் மட்டக்களப்பு என நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர் ஆனால் அவரின் தியாகத்தை அன்னைபூபதியின் பிள்ளைகளே கலங்கப்படுத்தியதை அவதானிக்க கூடியதாய் இருந்தது.

அன்னைபூபதியின் பிள்ளைகள் தமது தாயாரை கௌரவப்படுத்துவதைவிட்டு வணக்க நிகழ்வை தடைசெய்யும் விதத்தில் மட்டக்களப்பு பொலிசாரை அழைத்து அந்த அன்னைபூபதியின் புனித கல்லறையை சப்பாத்து கால்களுடன் பொலிசார் அவமதித்த நிகழ்வு எல்லோர் மனங்களிலும் முள்ளை பாச்சியதாக இருந்தது.
இதற்கான காரணம் என்ன பின்னணி என்ன என்று ஆழமாக ஆராய்ந்தால் அன்னைபூபதியின் பிள்ளைகள் எவருமே தற்போது தமிழ்தேசிய கொள்கையுடன் இல்லாமல் வேறு திசைமாறியுள்ளதை அவதானிக்கமுடிகிறது.

அந்த உன்னத தாயின் பிள்ளைகளில் ஒரு மகள் ஐக்கியதேசியகட்சியின் பிரதேச மகளீர் பொறுப்பாளர்,இன்னொருமகன் கருணாவின் கட்சியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்,அடுத்தவர் தமிழ்மக்கள் விடுதலை புலிகள் பிள்ளையான் கட்சி உறுப்பினர், அன்னைபூபதியின் குடும்பத்தில் ஒருசிலரை தவிர பெரும்பாலானவர்கள் தமிழ்தேசியத்திற்கு எதிரான கருத்தியலை கொண்டவர்களாகவே உள்ளனர்.

இதன் வெளிப்பாடுதான் 19/04/2018 அன்று நாவலடியில் நடந்த சம்பவமாக நோக்கமுடிகிறது.

இதில் மாற்றுக்கட்சிகளின் தூண்டுதல் நன்கு பயன்படுத்தப்பட்டது மட்டக்களப்பு ஐக்கியதேசிய கட்சி பொறுப்பாளர் திரு.மகேஷ்வரன் அந்த இடத்தில் சமூகம் தந்து அன்னைபூபதியின் மகள் ஐக்கியதேசிய கட்சி மகளீர் அணி பொறுப்பாளர் சாந்தினி அவர்களுடன் அடிக்கடி சம்பாசனை செய்து அவரின் உதவியுடனே பொலிசார்கள் சுமார் 20,பேர்வரை அழைத்து கடந்த 1988ல் இந்திய அமைதிப்படை எப்படி அன்னைபூபதியின் உண்ணாவிரதத்தை கலங்கப்படுத்தி அவரின் பிள்ளைகளுடன் கையொப்பம் பெற்று அன்னைபூபதியை உண்ணாவிரதத்தில் இருந்து தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதே போன்ற நிலைதான் அன்னைபூபதியின் 30,வது ஆண்டு வணக்கநிகழ்விலும் மட்டக்களப்பு பொலிஷ் படையினர் நடத்துகொண்ட செயலை காணமுடிந்தது.

சப்பாத்துக்காலுடன் நின்ற பொலிசாரை மாநகர முதல்வர் வெளியேற்றியதும் அதனூடாக அங்கு சில சல சலப்புகள் இடம்பெற்றதும் பூரணமாக அந்த உன்னத தியாத்தாய் அன்னைபூபதிக்கு அஞ்சலி வணக்கம் செலுத்தாமைக்கான காரணம் அன்னை பூபதியின் பிள்ளைகளின் சிறு பிள்ளைத்தனமே என்பதை அறியமுடிகிறது.

தமிழ்தேசியகூட்டமைப்புக்கு எதிரான கருத்தாடல்களையே அங்கு சமூகம் தந்த அன்னைபூபதியின் பிள்ளைகள் முன்வைத்தனர். ஆனால் ஐக்கியதேசியகட்சி அமைப்பாளர் மகேஷ்வரன் மற்றும் மாற்றுக்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அவர்களால் எந்த கருத்தும் கூறப்படவில்லை.

இந்த வணக்க நிகழ்வு உண்ணாவிரம் இடம்பெற்ற அதே தினத்தில் மட்டுநகர் காந்தி சதுக்கத்தில் தமிழ்மக்கள் விடுதலை புலிகள் பிள்ளையான் கட்சி உறுப்பினர்கள் அன்னைபூபதியின் நினைவை திசை திருப்பும் விதத்தில் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலைசெய்யக்கோருவது என்ற வெனரை கட்டி நான்கு பேர் மட்டும் உண்ணாவிரதம் என்று கூறு இருந்தனர்.

இவர்கள் உண்மையில் ஆனந்தசுதாகரனின் விடுதலையைவிட்டு சிறையில் உள்ள பிள்ளையானை விடுதலை செய்ய உண்ணாவிரதம் இருந்தால் அது நல்லவிடயம் இது அன்னைபூபதியின் நினைவுநாளை திசைதிருப்பும் முயற்சியாகவே அமைந்திருந்தது.

இதில் இருந்து உணரக்கூடிய உண்மைகள்

அன்னைபூபதியின் உன்னத தியாகத்தை கலங்கப்படுத்த வேறொரு சக்தி அன்னை பூபதியின் பிள்ளைகள் மூலமாக நன்கு திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான சின்னத்தனமான செயல்களில் அன்னைபூபதியின் பிள்ளைகள் என முகவரி காட்டும் எவரும் ஈடுபடக்கூடாது
என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பு இது எதிரிக்கும் துரோகிகளுக்கும் தீனி போடும் செயலாகும்.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் இந்த நாவலடி அன்னைபூபதி சதுக்கத்தின் வளாகத்தை தமது கட்டுப்பாட்டில் எடுத்து அதை ஒரு புனித இடமாக அபிவிருத்திசெய்து எவரையும் சுயதேவைக்காக அன்னைபூபதியை பயன்படுத்தாமல் எல்லோருக்கும் பொதுவான தாயாக நினைவுகூர அதற்கான நடவடிக்கைகளை இப்போதிருந்தே செய்ய வேண்டும் என்பதை மானசீயமாக தெரியப்படுத்துவோம்.

-மட்டுநகர் உதயசீலன்-

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்