அங்கஜன் இராமநாதன் கிளிநொச்சி விஜயம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பொன்னகர் KN7 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் குடிநீர் பற்றாக்குறை காரணமாக நீண்டகாலமாக அவதியுற்றிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களிடம் பிரதேச மக்கள் குடி நீரை பெறக்கூடிய முறையில் வழிவகை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை கருத்திட்கொண்ட பிரதேச சபை உறுப்பினர்களான ஐயம்பிள்ளை அசோக்குமார் ,குமாரசுவாமி தர்மராசா ஆகியோர் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களிடம் உடனடியாகவே நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கமைவாக கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களினால் செயல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் கிளிநொச்சி பொன்னகர் பொதுநோக்கு மண்டபத்தில் பிரதேச சபை உறுப்பினர்களினால் நீர்த்தாங்கி வழங்கப்பட்டது.இதன் போது வட்டார பிரதிநிதி மைக்கல் கனியுட் ,கிளிநொச்சி பிரதேச காரியாலய இணைப்பாளர் பழனியாண்டி நந்தகுமார் ஆகியோரும் நிகழ்வில் இணைந்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்