வெற்றிலை ஏற்றுமதி பாரிய அளவில் அதிகரிப்பு

பாகிஸ்தானுக்கான வெற்றிலை ஏற்றுமதி பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வருடாந்தம் ஐயாயிரம் தொடக்கம் ஆறாயிரம் மெற்றிக் தொன் வெற்றிலைகள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அதற்கு மேலதிகமாக தெங்கு, ஆடை, அரிசி, இரசாயனப் பொருட்கள், இயற்கை றப்பர், றப்பர் கையுறைகள், தேயிலை மற்றும் சுவையூட்டிகள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு பருத்தி நூல், சீமெந்து, இரசாயன உரம், மருந்துபொருட்கள், போக்குவரத்து சாதனங்கள் என்பன அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்