பளை தொட­ருந்­துக் கட­வை­யில் ஒலி எழுப்ப மறந்த ஒலி எழுப்­பும் கருவி !!

பளை, பெரிய பளைப் பகுதியில் அமைந்துள்ள தொடருந்துக் கடவையில் உள்ள ஒலி எழுப்பும் கருவி நீண்ட நாள்களாகப் பழுதடைந்து காணப்படுகிறது எனப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு அற்ற தொடருந்துக் கடவைகள் காணப்படுகின்ற நிலையில் பாதுகாப்புக் கடவைகள் என அடையாளம் இடப்பட்ட கடவைகளும் சில குறைபாடுகளுடன் காணப்படுகின்றன.

அந்தவகையில் பளை, பெரியபளைப் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புக் கடவையில் உள்ள ஒலி எழுப்பும் கருவியின் ஒரு பக்கம் ஒலி எழுப்பாத நிலையில் மிக நீண்ட நாள்களாகக் காணப்படுகின்றது. இது தொடர்பாகப் பளை தொடருந்து நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்­கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தின் நிலைய முகாமையாள
ரிடம் கேட்டபோது இது தொடர்பாக பொறியியல் பிரிவுக்குத் தகவல் வழங்கி உடனடியாச் சீரமைப்பு செய்வதறகான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்